முத்தலாக் தடை சட்டத்தில் இத்தனை சிறப்புகளா..? வாங்க பாக்கலாம்..,!

1217

முத்தலாக் தடை சட்டம் அதிகாரப்பூர்வமாக அமலுக்கு வருகிறது. இந்த சட்டத்தில் எந்த விதமான சிறப்பம்சங்கள் உள்ளன என்பவற்றை தற்போது பார்க்கலாம்…..

1. முத்தலாக் தடை சட்டம் மூலம் மனைவி தனது கணவன் மீது புகார் கொடுக்கலாம். அல்லது அந்த பெண்ணின் ரத்த உறவினர்கள், திருமணம் மூலம் உண்டான உறவினர்கள் புகார்கள் கொடுக்கலாம்.

2. முத்தலாக் தடை சட்டம் மூலம் குற்றம் நிரூபிக்கப்பட்ட ஆண்
3 ஆண்டு சிறையில் அடைக்கப்படுவார்.

3. முத்தலாக் தடை சட்டம் மூலம் பெயில் பெற முடியும். ஆனால் குற்றம்சாட்டிய பெண்ணின் அனுமதியுடன் மட்டுமே மெஜிஸ்ட்ரேட் பெயில் வழங்க முடியும்.

4. முத்தலாக் தடை சட்டம் மூலம் கணவனும் மனைவியும் ஒருவருக்கு ஒருவர் பேசி, தங்களுக்குள் சுமூகமான தீர்வை கொண்டு வந்து வழக்கை வாபஸ் செய்ய விரும்பினாலும் செய்யலாம்.

5. முத்தலாக் செய்த கணவனுடன் மீண்டும் பெண் சேர வேண்டும் என்றால் அந்த பெண் வேறு ஒருவரை மணமுடித்து பின் விவாகரத்து செய்திருக்க வேண்டும் என்ற நிக்கா ஹலாலா முறை ஒழிக்கப்படும். அதற்கு பதிலாக இந்த சட்டம் மூலம் சமாதானம் செய்து கணவனும் மனைவியும் ஒன்று சேரலாம்.

6. முத்தலாக் பெற்ற பெண் இந்த சட்டம் மூலம் கணவனிடம் இருந்து ஜீவனாம்சம் பெற முடியும். இந்த பணத்தை மெஜிஸ்டிரேட் நிர்ணயம் செய்வார்.

7. மைனர் குழந்தைகளை பாதுகாக்கும் உரிமை இந்த சட்டம் மூலம் மனைவிக்கு வழங்கப்படும். குழந்தைக்கு உரிமை கோரும் உரிமை பெண்ணுக்கே வழங்கப்படும்.

Advertisement

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of