திருமணம் முடிந்த 24 மணி நேரத்தில் முத்தலாக்

543

திருமணம் முடிந்த 24 மணி நேரத்தில் முத்தலாக் கூறி மனைவியை விவாகரத்து செய்த சம்பவம் உ.பி,யில் நடந்துள்ளது.

உ.பி.,யின் ஜகன்கிராபாத்தை சேர்ந்தவர் ஷஹி ஆலம். இவருக்கும் ருக்ஷானா என்ற பெண்ணிற்கும் ஜூலை 13 ம் தேதி திருமணம் நடந்துள்ளது. பெண் வீட்டார் வரதட்சனையாக தருவதாக கூறி இருந்த மோட்டார் பைக்கை தவறவில்லை.

இதனால் கோபமடைந்த ஆலம், அடுத்த நாளே, முத்தலாக் கூறி மனைவியை விவாகரத்து செய்துள்ளார். பெண்ணின் தந்தை அளித்த புகாரின் பேரில் வரதட்சணை தடுப்பு சட்டத்தின் கீழ் ஆலம் மற்றும் அவரது குடும்ப உறுப்பினர் 12 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

இந்த வழக்கு தற்போது விசாரணைக்காக வட்டாட்சியரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
எஸ்.பி., சுகாஷ் தோமர் கூறுகையில், விரைவில் விசாரணை முடிக்கப்படும். விசாரணைக்கு பிறகு உரிய தண்டனை வழங்கப்படும் என்றார்.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of