முத்தலாக் தடை மசோதா : கடந்த முறை கடும் எதிர்ப்பு தெரிவித்த அ.தி.மு.க, தற்போது ஆதரவு

407

மக்களவையில் முத்தலாக் தடை மசோதாவிற்கு கடந்த முறை கடும் எதிர்ப்பு தெரிவித்த அ.தி.மு.க, தற்போது ஆதரவு தெரிவித்துள்ளது.

கடந்தாண்டு முத்தலாக் தடை மசோதா மக்களவையில் தாக்கல் செய்யப்பட்ட போது அ.தி.மு.க எம்.பி-யாக இருந்த அன்வர் ராஜா முத்தலாக் தடை சட்டத்தை கடுமையாக எதிர்த்தார். முத்தலாக் சட்டம் இஸ்லாமியர்களுக்கு மட்டும் எதிரானது அல்ல, இறைவனுக்கே எதிரானது என்று கூறியிருந்தார்.

இந்நிலையில் மக்களவையில் நேற்று முத்தலாக் தடை மசோதா மீதான விவாதத்தில் பங்கேற்று பேசிய அ.தி.மு.க உறுப்பினர் ரவீந்திரநாத் குமார், முத்தலாக் தடை சட்டம் இஸ்லாமிய பெண்களுக்கு பாதுகாப்பு அளிப்பதாக கூறினார்.

பழங்காலத்தில் இருந்தே மகளிருக்கு சம உரிமை இல்லாத நிலையில், இந்த மசோதா அதனை பெற்றுத்தர வழிவகுக்கும் என்றார். மகளிருக்கு சமநிலை கிடைக்க உதவும் என்பதால் இந்த மசோதாவை அ.தி.மு.க ஆதரிப்பதாக ரவீந்திரநாத் குமார் தெரிவித்தார்.

 

 

Advertisement

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of