மதுரைக்கு 5 மாதங்களில் 5 மாவட்ட ஆட்சியர்களா? – முத்தரசன் கண்டனம்..!

140

ஐந்து மாதங்களில் ஐந்து மாவட்ட ஆட்சித்தலைவர்களா என்று மதுரை ஆட்சித்தலைவர் இடமாற்றத்திற்கு கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன் வியாழனன்று விடுத்துள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:

மதுரை மாவட்ட ஆட்சியர் திரு நாகராஜன் மாற்றம் தொடர்பாக பல்வேறு தகவல்கள் வெளியாகி உள்ளன. மாவட்ட ஆட்சியர்களை மாற்றுவது அரசின் கடமைப் பொறுப்பு. எனினும் ஆட்சி நிர்வாகத்தில் அரசியல் தலையீடு காரணமாக ஆட்சிப்பணி அதிகாரிகள் மாற்றப்படுவது நிர்வாகக் கட்டமைப்பை நிலைகுலைத்து விடும்.

நேர்முகத் தேர்வு முடித்து கிடப்பில் போட்டு வைத்திருந்த அங்கன்வாடிப் பணியாளர் நியமனத்தை செய்தததைத் தொடர்ந்து ஆளும் கட்சியினர் கொடுத்த அரசியல் அழுத்தம் காரணமாக மாவட்ட ஆட்சியர் மாற்றம் நடைபெற்றதாக செய்திகள் வெளியாகி உள்ளன.

கடந்த 5 மாதங்களில் மட்டும் 5 முறை மாவட்ட ஆட்சியர்களை மாற்றி, மாற்றி நியமனம் செய்துள்ள அரசின் நடவடிக்கைகள் ஆழமான சந்தேகங்களை உருவாக்கி உள்ளது.

ஆளும் கட்சியின் நிர்பந்தத்திற்கு பணியாத அலுவர்களை பணி மாற்றம் செய்து வரும் அரசின் அதிகார அத்துமீறல் நடவடிக்கையை இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு வன்மையாகக் கண்டிக்கிறது.

இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of