“எனது மகளின் இறப்பு தற்கொலை போல தெரியவில்லை” | Fatima Latheef

722

சென்னை ஐஐடியில் தற்கொலை செய்துக்கொண்டு உயிரிழந்த மாணவி பாத்திமா லத்தீப்பின் தந்தை அப்துல், டிஜிபி-யிடம் புகார் அளித்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தனது மகளுக்கு தினசரி கடிதம் எழுதும் பழக்கம் உண்டு, ஆனால் அதனை ஐஐடி நிர்வாகம் மறைத்து விட்டதாக குற்றம்சாட்டினார்.

மேலும், பாதிமாவின் செல்போன் தங்களுக்கு கிடைத்ததாக கூறிய அவர், அதில் பேராசிரியர் சுதர்சன பத்மநாபன் பற்றின தகவல் இருந்ததன் அடிப்படையில் புகார் அளித்துள்ளதாக கூறினார். மேலும், தனது மகள் தூக்கிட பயன்படுத்திய கயிறு எங்கே என கேள்வி எழுப்பிய அவர், தனது மகளின் அறையில் உள்ள உடைமைகள் அனைத்தும் சிதறி கிடந்தாக கூறினார்.