“என் அக்காவை காணவில்லை” – சுசித்ராவின் தங்கை போலீசில் புகார்

360

சில வருடங்களுக்கு முன்பு தான் வெளியிட்ட புகைப்படங்களால் மிகவும் பிரபலமானவர் பிரபல பாடகி சுசித்ரா, தற்போது இவர் காணாமல் போய்விட்டதாக அவரது தங்கை சுனிதா போலீசில் கடந்த 11ம் தேதி புகார் அளித்தார்.

அதில் சுசித்ராவை காணவில்லை என்றும், அவரை கண்டுபிடித்து தருமாறும் கூறி இருந்தார். இது பற்றி போலீசார் விசாரணை நடத்தினர். போலீசில் அளிக்கப்பட்ட புகாரில் சுசித்ராவின் செல்போன் எண்ணும் குறிப்பிடப்பட்டிருந்தது.

இதையடுத்து சுசித்திராவின் செல் போன் நம்பரை கொண்டு தேடுதல் நடித்திய போலீசாருக்கு அவர் அடையாறில் உள்ள நட்சத்திர ஓட்டல் ஒன்றில் இருப்பது தெரியவந்தது. அங்கு சென்று போலீசார் அவரிடம் விசாரணை நடத்தினர். அப்போது சுசித்ரா நான் காணாமல் போகவில்லை என்றும் ஓய்வெடுப்பதற்காக வந்துள்ளதாகவும் போலீசாரிடம் கூறினார்.

இந்த விவகாரம் தொடர்பாக போலீஸ் புகார் அளித்த சுசித்ராவின் தங்கை சுனிதாவிடம் போனில் தொடர்பு கொண்டு கேட்ட போது பதில் அளிக்க அவர் மறுத்துவிட்டார்.