நான் எப்போதும் அதிமுக பக்கம் தான்- சட்டசபையில் கருணாஸ்

123

இன்று நடைப்பெற்ற தமிழக சட்டசபையில் கருணாஸ் பேசுகையில்,

ராமநாதபுரத்தில் அப்துல்கலாம் பெயரில் கல்லூரி அமைக்கப்படும் என அறிவித்ததற்கு மிகவும் நன்றி தெரிவித்தார். அப்போது கல்லூரி அமையவுள்ளது கருணாஸ் தொகுதியில் இல்லை. எனது தொகுதி தான் என அமைச்சர் மணிகண்டன் குறுக்கிட்டு பேசினார்.

அதனைத்தொடர்ந்து பேசிய கருணாஸ் எனது தொகுதியில் அரசு எதைய செய்யவில்லை என்று ஒப்புக்கொண்ட அமைச்சருக்கு நன்றி. நான் பதவியில் இருக்கும் வரைக்கும் எனது ஆதரவு எப்போதும் அதிமுக அரசுக்கே.

அதிமுக அரசு ஆட்சி செய்ய வேண்டுமென்பதே எண்ணுடைய விருப்பம். இனி வரும் தேர்தலில் போட்டியிடுவேனா என்பது எனக்கு தெரியாது. நான் புலி என்றாலும் பாசப்புலி என கூறி பேச்சை முடித்தார்.

இவரை தொடர்ந்து பேசிய துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் இந்த பாசப்புலியை கூண்டுக்குள் அடைத்து வைத்தால் பாசமாக இருக்குமா என கேட்டார்.