“என்னுடைய ஆதரவு எப்போதும் அப்பாவிற்கு தான்”

299

நடிப்புலகில் பல சாதனைகள் படைத்தவர் உலக நாயகன் கமல்ஹாசன், தற்போது மக்கள் நீதி மையம் தலைவராக உள்ள அவர் தீவிர அரசியலில் ஈடுபட்டு வருகிறார். இந்நிலையில் நடிகர் கமல் அவர்களின் மகள் சுருதி ஹசான் இன்று மதுரையில் ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்று பேசினார்.

அப்போது அப்பாவின் அரசியல் வாழக்கையில் நீங்கள் பங்கு வகிப்பீர்களா ? உங்கள் ஆதரவு அப்பாவிற்கு உண்டா ? என்று செய்தியாளர்கள் கேட்டனர்.

இதற்கு பதிலளித்த அவர், அப்பா இளம் வயதில் இருந்தே சமூக அக்கறை கொண்டவர், அரசியல் தெளிவும் அவரிடம் இருக்கிறது, ஆனால் எனக்கு அந்த தெளிவும் இல்லை அரசியலில் ஈடுபடும் ஆசையும் இல்லை. ஆனால் அரசியலை பொறுத்தவரை என்னுடைய ஆதரவு அப்பாவிற்கு எப்போதும் உண்டு என்று அவர் கூறினார்.

என் துறையில் சாதிக்க வேண்டும் என்பதில் தான், எனது கவனம் உள்ளது என்றார். அரசியலில், ரஜினி, கமல் இருவரும் இணைவார்களா எனக் கேட்டால், நான், என் தந்தையை பற்றி பேசுவதே சரியானதாக இருக்கும். மற்றவர்களை பற்றி எனக்கு தெரியாது என்றார்.

Advertisement

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of