17 வயதான 2 சிறுவர்களை கத்தியால் தாக்கிய மர்ம கும்பல்! சிறுவர்கள் உயிரிழப்பு..

410

இங்கிலாந்து தலைநகர் லண்டனில் அமைந்துள்ள மில்டன் கெய்ன்ஸ் நகரில் உள்ள ஒரு வீட்டில் நேற்று முன்தினம் விருந்து நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் அந்த பகுதியை சேர்ந்த சிறுவர்கள் மற்றும் இளைஞர்கள் கலந்து கொண்டு ஆடல் பாடல் என மகிழ்ச்சியில் திளைத்திருந்தனர்.

நள்ளிரவை தாண்டியும் விருந்து நிகழ்ச்சி தொடர்ந்ததாக தெரிகிறது. அப்போது அங்கு வந்த இளைஞர்கள் சிலர் விருந்து நடந்த வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்து அங்கிருந்தவர்களை கத்தியால் சரமாரியாக குத்தினர். இதில் 17 வயதான 2 சிறுவர்கள் ரத்த வெள்ளத்தில் சரிந்து சம்பவ இடத்திலேயே  இறந்தனர்.

மேலும் இளைஞர்கள் 2 பேர் பலத்த காயம் அடைந்தனர். இந்த சம்பவம் குறித்து அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் போலீசுக்கு தகவல் கொடுத்தனர். மேலும் இரு தரப்பினரிடையிலான முன்விரோதம் காரணமாக இந்த கொலை நடந்திருக்கலாம் என போலீசார் தெரிவித்தனர். எனினும் இது குறித்து போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.

Advertisement

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of