வாள் சண்டையா? கம்புச்சண்டையா? கராத்தேவா? ஸ்டாலினை சண்டைக்கு இழுத்த சீமான்!

1032

சூலூர் தொகுதியில் நாம் தமிழர் கட்சி சார்பில் வழக்கறிஞர் விஜய ராகவன் போட்டியிடுகிறார். அவருக்கு ஆதரவாக அந்தக் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பிரசாரத்தில் ஈடுபட்டார்.

அப்போது அவர் பேசியதாவது:

“கருணாநிதியின் மகன் என்பதை தாண்டி ஸ்டாலினுக்கு என்ன தகுதி இருக்கு? கருணாநிதிக்கே தகுதி இல்லைன்னு சொல்றேன்.. இதுல மகனுக்கு என்ன தகுதி இருக்கு? ஸ்டாலின் என்ன ரஷ்ய அதிபர் ஜோசப் ஸ்டாலினா? என்ன ஸ்டாலின்? பிழைப்புக்காக நக்கி பிழைக்கிற கூட்டம் இல்லை நாங்கள்.

என் இன மக்களை பிழைக்க வைக்கிற புரட்சியாளர் கூட்டம் இது.
திராவிட கட்சிகள் எல்லாம் ஆட்சிக்கு வரவில்லை என்றால் சீமான் எல்லாம் இப்படி பேசிவிடுவாரா? படித்து இருப்பாரா என்று என்னை பார்த்து கேட்கிறார்கள். படிக்க வெச்சது எங்க தாத்தா காமராஜ். குடிக்க வெச்சது உங்க அப்பாவும், நீங்களும்தான்!
இப்போ இந்தியாவுக்கே நான்தான் பெரிய பிரச்னை.

தமிழ்நாட்டை தமிழன் ஆள வேண்டும் என்று நான் சொன்னதைப் பார்த்துத்தான், ராகுல் காந்தி அதே கருத்தை சொல்ல ஆரம்பிச்சிருக்கார். அந்த அளவுக்கு மிரட்டி வெச்சிருக்கோம்.நான் வாய்ச் சொல் வீரர் சரி… அப்படின்னா ஸ்டாலின் வாள் சொல் வீரரா? நான் அதற்கும் தயார்.

வாள் சண்டையா, கம்புச் சண்டையா, கராத்தேயா… எதுவா இருந்தாலும் சரி. ஸ்டாலினா?, உதயநிதி ஸ்டாலினா? யார் வந்தாலும் சரி, உங்களை முழுவதுமாக ஒழிக்காமல் நான் போக மாட்டேன். எடப்பாடி பழனிசாமி ஒரு புள்ளை பூச்சி. அவரையே உங்களால் சமாளிக்க முடியவில்லையே”

இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of