“விஜயகாந்த் ஆளுமை மிக்கவர்.., ஆனால் ரஜினிகாந்த் ஒரு..,” சீமான் பளார் பேட்டி..!

293

திருச்சி விமான நிலையத்தில் மதிமுக – நாம் தமிழர் கட்சி தொண்டர்கள் இடையே ஏற்பட்ட மோதல் சம்பவம் தொடர்பாக ஜனவரி 7-ஆம் தேதி ஆஜராக சீமானுக்கு திருச்சி குற்றவியல் நீதிமன்றம் உத்தரவிட்டது.

நீதிமன்றத்தில் ஆஜராகுவதற்கு முன்னதாக செய்தியாளர்களிடம் பேசிய சீமான்,
சிவாஜியின் அரசியல் குறித்து முதலமைச்சரின் கருத்து சிவாஜியை சிறுமைப்படுத்துவதாக உள்ளது என்றும் எம்.ஜி.ஆரை போல் சிவாஜிக்கு அரசியலில் நுட்பம் இல்லை, ஆனால் அவர் சிறந்த ஆளுமை என்று தெரிவித்தார்.

எம்.ஜி.ஆர் அரசியலுக்கு வருவதற்காக வழிவகை செய்து கொடுத்தவர் கருணாநிதி என்றும் அவர் கூறினார். வெற்றிடம் இருப்பதால் அரசியலுக்கு வருவதாக கூறும் ரஜினிகாந்திற்கு, வெற்றிடம் இல்லை என்றால் அரசியலுக்கு வந்திருக்க மாட்டீர்களா என்று கேள்வி எழுப்பினார்.

ஜெயலலிதா, கருணாநிதியை எதிர்த்து அரசியலுக்கு வந்த விஜயகாந்த் ஆளுமை மிக்கவர் என்று கூறிய சீமான், அரை மணி நேரம் கூட, தான் கூறிய கருத்தில் உறுதியாக நிற்க முடியவில்லை என்பது தான் நடிகர் ரஜினியின் ஆளுமை என்று விமர்சித்தார்.