ராமதாஸ் போடும் மெகா குட்டிக்கரணம்!! நாஞ்சில் சம்பத் விமர்சனம்

798

தமிழகத்தில் கூட்டணி அலைவரிசைகள் திடீரென மாற்றம் பெற தொடங்கி கிட்டத்தட்ட 10 நாட்கள் கடந்துவிட்டன. 48 மணி நேரத்தில் கூட்டணி கட்சிகள் யார் என்று அறிவிக்கப்படும் என்று கூறிய அதிமுகவிலும் கூட்டணி இறுதி நிலைப்பாட்டை எட்டவில்லை.

திமுகவும் மெதுவாக பேச்சுவார்த்தையை ஆரம்பித்து காங்கிரசுக்கு 10 தொகுதிகள் என்று கூட்டணியை உறுதியாக்கி இருக்கிறது. தோழமை கட்சிகளுடன் தொடர்ந்து பேசி வருகிறது. அதிமுகவில் யாரும் எதிர்பாராத வண்ணம் பாமக சென்று உட்கார்ந்து கொண்டு 7 தொகுதிகளை பெற்றுக் கொண்டு வந்துவிட்டது.

பாஜக 5 தொகுதிகளை பெற்றுக் கொண்டுள்ளது. கூட்டணியில் பாமக இணைந்தது குறித்து திமுக உள்பட ஒரு சில கட்சிகள் கடும் விமர்சனத்தை முன்வைத்து வருகின்றன.

இந்நிலையில் தமது மகனை மத்திய அமைச்சராக்கவே அதிமுகவுடன் கூட்டணிக்கு பாமக இசைந்துள்ளார் என்று நாஞ்சில் சம்பத் கடுமையாக விமர்சித்துள்ளார்.

இது குறித்து அவர் கருத்து தெரிவித்து இருப்பதாவது:

“எந்த சூழ்நிலையிலாவது மகனை மத்திய அமைச்சராக்க வேண்டும். அதற்காக தான் ராமதாஸ் மெகா குட்டிக்கரணம் போட்டுள்ளார்.பாஜகவுடன் கூட்டணி வைத்து தங்களை தாங்களே விற்றுக் கொண்ட அதிமுக அதை கூட்டணி என்று கூறுகிறது. அரசியலில் டிடிவி தினகரன் ஒரு விளையாட்டு பிள்ளை. அறிவார்ந்த அரசியல் செய்வார் என்று எல்லாரும் எதிர்பார்த்தனர். ஆனால் தமக்கு தானே சுவற்றில் மோதிக் கொண்டு காயம்பட்டு கொள்கிறார்” என்று கூறினார்.