“உலகின் அழிவு ஆரம்பம்..,! இந்த மாதரி நடந்ததே இல்ல.,” நாசா அறிவிப்பால் அதிர்ச்சி..!

11279

பூமி வெப்பமடைவதின் காரணமாக உலகில் பல்வேறு மோசமான நிகழ்வுகள் நடந்துக்கொண்டு இருக்கிறது. மரங்களை அதிகம் வெட்டுவதும், இன்னும் மரங்களை நடாமல் இருப்பதும் தான் இதற்கு முக்கிய காரணமாக கருதப்படுகிறது.

இந்நிலையில் தற்போது நடைபெற்றுள்ள நிகழ்வு ஒன்று ஆராய்ச்சியர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கிரீன்லாந்தில் உள்ள பனிப்பாறைகளில், 24 மணி நேரத்தில் 1100 கோடி டன் உருகி கடல் நீர்மட்டம் அதிகமாகியுள்ளதாக அதிர்ச்சியளிக்கும் தகவலை ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இது குறித்து நாசா கூறுகையில்,

“கிரீன்லாந்தின் பனிப்பாறைகள் மிகப்பெரிய உருகும் நிகழ்வுக்கு தயாராக உள்ளன. பில்லியன் டன்களில் உருகும் நீர் அட்லாண்டிக் கடலில் கலப்பதால் நீர்மட்டம் கடுமையாக உயர்ந்து காணப்படுகிறது.

அதிக வெப்பத்தின் காரணமாகவே, அதிக அளவில் பனிக்கட்டிகள் உருகியுள்ளன. எதிர்காலத்தில் இன்னும் மோசமான நிலையை சந்திக்க நேரிடும்”

என எச்சரித்து கூறியுள்ளது.

இதனால் உலகம் தனது அழிவை நோக்கி பயணித்துக்கொண்டிருக்கின்றன என்றும், இதுபோன்று இதுவரை நடந்ததே இல்லை என்றும் பலர் கூறி வருகின்றனர்.

Advertisement

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of