நடிகர் சங்கத்தேர்தல் ரத்து – நேர்மைக்கும், உண்மைக்கும் கிடைத்த வெற்றி – ஐசரி கணேஷ்

103

நடிகர் சங்கத்தேர்தல் ரத்து செய்யப்பட்டது நேர்மைக்கும், உண்மைக்கும் கிடைத்த வெற்றி என, பாக்யராஜ் அணியின் ஐசரி கணேஷ் வரவேற்பு தெரிவித்துள்ளார்.

சென்னை நந்தனத்தில் செய்தியாளர்களிடம் பேசிய பாக்யராஜ் அணியை சேர்ந்த தயாரிப்பாளர் ஐசரி கணேஷ், பல்வேறு முறைகேடுகள், குழப்பங்களுடன் நடைபெற்ற நடிகர் சங்கத்தேர்தல் ரத்து செய்யப்பட்டுள்ளது தர்மம், நியாயம், நீதிக்கு கிடைத்த வெற்றி என்று கூறினார்.

நடிகர் சங்கக் கட்டிட பணிகளை விரைந்து முடிக்க, நாடக கலைஞர்களுக்கு ஓய்வூதியம் வழங்க விரைவில் தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்றும், ரஜினிகாந்த் மற்றும் கமல்ஹாசனிடம் ஆலோசித்து  தேர்தலை அணுகுவது குறித்து முடிவு செய்யப்படும் எனவும் தெரிவித்தார்.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of