செயலாளரின் கிடுக்குப்பிடி கேள்விக்கு பதிலளிக்க முடியாமல் திணறிய அதிகாரிகள்

519

நாகை அருகே குடிமராமத்து பணிகளை ஆய்வு செய்த பொதுப்பணித்துறை கூடுதல் செயலாளரின் கிடுக்குப்பிடி கேள்விக்கு பதிலளிக்க முடியாமல் அதிகாரிகள் திணறிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நாகை மாவட்டத்தில் பொதுப்பணித்துறை சார்பில் குடிமராமத்து பணிகள் நடைபெற்று வருகின்றன.16 கோடி ரூபாய் மதிப்பீட்டில், 82 இடங்களில் குடிமராமத்து பணிகள் நடைபெறுகின்றன.

இந்த பணிகளை ஆளுங்கட்சியினர் போலியான விவசாய சங்கங்களின் பெயரில் மேற்கொண்டு வருவதால், பணிகள் தரமற்று இருப்பதாக புகார் எழுந்துள்ளது.

இதனையடுத்து குடிமராமத்து பணிகளை பொதுப்பணித்துறை கூடுதல் செயலாளர் பாலாஜி ஆய்வு மேற்கொண்டார். அப்போது அய்யாவையனாற்றில் தூர்வாறிய பகுதிகளை பார்வையிட்ட அவர், அப்போது தூர்வாரிய மணல் எங்கே..? என அதிகாரிகளிடம் கேள்வி எழுப்பினார்.

இந்த கேள்விக்கு பதில் சொல்ல முடியாமல் அதிகாரிகள் திணறினர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of