நான் அவனில்லை… கலெக்டரிடம் பார் நாகராஜ் மனு

248

அதிமுக பிரமுகர் பார் நாகராஜ் கோவை மாவட்ட கலெக்டர் ராசாமணியை நேற்று நேரில் சந்தித்து மனு அளித்தார்.அதில் பொள்ளாச்சியில் நடந்து கொண்டிருக்கும் ஆபாச வீடியோ வழக்கிற்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. ஆனால் எனது அரசியல் வாழ்விலும்  பொது வாழ்விலும் எனக்கு வேண்டாதவர்கள் என்னை அந்த வழக்கில் சம்பந்தப்படுத்தி தவறான பதிவுகளை பதிவிட்டு வருகிறார்கள்.

ஊடகங்களில்  சமூக வலைதளங்களில் வேறு யாரோ உள்ள ஆபாச வீடியோவில், நான் இருப்பதாக தவறாக பரப்பி வருகிறார்கள். அந்த வீடியோவில் இருப்பது நான் இல்லை. எனக்கு திருமனம் ஆகி ஒரு வருடம் ஆகிறது  இந்த வழக்கு தொடர்பாக பாதிக்கப்பட்ட பெண்ணின் சகோதரர் அளித்த புகாரிலும் காவல் துறை முதல் தகவல் அறிக்கையிலும் எனது பெயரே இல்லை.

ஆனால் என்னை நீதிபதியிடம் அழைத்து சென்றார்கள். நீதிபதி சம்பந்தப்பட்ட 4 பேர் வழக்கில் இவர் பெயர் இல்லை என்று கூறி எப்போது அழைத்தாலும் ஒத்துழைப்பு தர வேண்டும் என கூறி என்னை அனுப்பி விட்டார்கள்.  மீண்டும் என் மீது தவறாக பரப்புவதை தடுக்க வேண்டும் என கேட்டு கொள்கிறேன்.  இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

 

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of