“கொலை தான் முடிவு..” கர்ப்பம் அடைந்த காதலி..! மிரட்டும் சப் இன்ஸ்பெக்டர்..! திடுக் ஆடியோ..!

765

நாகையில் இளம்பெண்ணை காதலித்து கர்ப்பமாக்கி ஏமாற்றிய காவல்துறை உதவி ஆய்வாளர், கருவை கலைத்ததோடு வெளியில் சொன்னால் குடும்பத்தோடு கொலை செய்துவிடுவேன் என மிரட்டல் விடுத்துள்ளார்.

மயிலாடுதுறை வில்லியணல்லூரை சேர்ந்தவர் சுபஸ்ரீயும், திட்டச்சேரி உதவி ஆய்வாளர் விவேக் ரவிராஜும் காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இருவரின் பழக்கம் நெருக்கமானாதால், சுபஸ்ரீ கர்ப்பம் அடைந்துள்ளார்.

இதையடுத்து உதவி ஆய்வாளர் விவேக், கருவை கலைத்துவிட்டால் திருமணம் செய்து கொள்வதாக கூறி சுபஸ்ரீயை கட்டாயப்படுத்தி சென்னையில் உள்ள மருத்துவமனையில் கருவை கலைத்துள்ளார்.

இதன் பின்னர் சுபஸ்ரீயுடன் பேசுவதை தவிர்த்த விவேக், திருமணம் செய்ய முடியாது என்றும், நடந்ததை வெளியே சென்னால், குடும்பத்தோடு கொலை செய்துவிடுவேன் என மிரட்டியுள்ளார்.

இதுகுறித்து சுபஸ்ரீ காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ள நிலையில், உதவி ஆய்வாளர் விவேக் புகாரை வாபஸ் பெறக்கோரி தொடர்ந்து கொலை மிரட்டல் விடுத்து வருவதாக தெரிவித்துள்ளார்.