வடிவேலு பானியில் என் இதயத்தை காணோம் சார்… என புகார். திக்கு முக்காடிய போலீஸ்.

328

நாக்பூரில் உள்ள காவல் நிலையத்தில் இளைஞர் ஒருவர் தனது இதயத்தை ஒரு பெண் திருடி விட்டதாக புகார் ஒன்றை தெரிவித்துள்ளார். இந்த புகாரைப்பெற்ற காவல் துறையினர் சற்று திக்கு முக்காடினர்.

இளைஞர் அந்த புகாரில் ஒரு அழகான பெண் தனது இதயத்தை திருடி விட்டதாகவும், அதை காவல்துறையினர் திரும்ப பெற்றுத்தரவேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.

இது குறித்து காவல்துறையினர் கூறுகையில், எங்களிடம் பெரும்பாலும் திருடப்பட்ட பொருட்களைப் பற்றிய புகார் வந்துள்ளது. ஆனால், இது போன்ற ஒரு வித்தியாசமான வழக்கை நாங்கள் இதுவரை பெற்றது இல்லை. இருந்தாலும், உயர் அதிகாரிகளுடன் சட்டரீதியாக ஆலோசித்த பிறகு அந்த இளைஞரிடம் அவரை விட்டு விலகுமாறு
அறிவுறுத்தியுள்ளனர்.