No-ன்னா.. No தான்..! நளினிக்கு செக் வைத்த சிறைத்துறை அதிகாரிகள்..!

506

ராஜீவ்காந்தி கொலை வழக்கில் பேரறிவாளன், நளினி, முருகன் உட்பட 7 பேர் கைது செய்யப்பட்டு, கடந்த 28 ஆண்டுகளாக சிறைத்தண்டனை அனுபவித்து வருகின்றனர். இவர்களின் விடுதலைக்கு தமிகத்தில் பலரும் குரல் எழுப்பி வருகின்றனர்.

இந்நிலையில் நளினி அவரது மகள் திருமணத்திற்கு பரோல் கேட்டு வின்னப்பித்திருந்தார். 6 மாதத்திற்கு பரோல் தரவேண்டும் என்று அவர் கோரிக்கை விடுத்திருந்த நிலையில், 1 மாதத்திற்கு மட்டுமே பரோல் கிடைத்தது.

கடந்த மாதம் 25-ந் தேதி பரோலில் வெளியே வந்த நளினி, சத்துவாச்சாரியில் தங்கி தினமும் காவல் நிலையத்தில் கையெழுத்திட்டு வருகிறார்.

இந்த நிலையில் நளினியின் மகள் ஹரித்ரா தமிழகம் வருவதில் தாமதம் ஏற்படுவதால் மேலும் ஒரு மாதம் பரோல் கேட்டு உள்துறை செயலாளர், சிறைத்துறை தலைவர் ஆகியோருக்கு நளினி மனு அனுப்பியிருந்தார். அந்த மனுவை இன்று பரிசீலித்த சிறைத்துறை அதிகாரிகள் நளினியின் பரோலை நீட்டிக்க மறுத்துவிட்டனர்.

Advertisement