நரிக்குறவர் மக்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் வழங்கிய நல்ல சமாரியன் கிளப்

252

நெல்லை அருகே வள்ளியூர் நல்ல சமாரியன் கிளப் சார்பில் நரிக்குறவர் மக்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் வழங்கப்பட்டன.

கொரோனா பரவலை தடுக்க ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டடுள்ளதால், நெல்லை மாவட்டம் வள்ளியூர் நரிக்குறவர் காலனியில் வசிக்கும் மக்கள் வாழ்வாதம் இழந்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

இங்குள்ள 102 குடும்பங்களுக்கு நல்ல சமாரியன் கிளப் சார்பில் அத்தியாவசிப் பொருட்கள் வழங்கப்பட்டன. 5 கிலோ அரிசி, அரை கிலோ துவரம் பருப்பு மற்றும் மளிகை பொருட்கள் வழங்கி, கொரோனா வைரஸ் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

இதில் வள்ளியூர் காவல் ஆய்வாளர் திருப்பதி, நல்ல சமாரியன் கிளப் வள்ளியூர் கிளை தலைவர் செல்வநாயக்கம், செயலாளர் குணசீலன் மற்றும் செஞ்சிலுவை சங்கம் சார்பில் ஆனந்த், அலெக்ஸ் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Advertisement

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of