நாம் தமிழர் கட்சியின் முக்கிய நபர் வைரஸ் தொற்றால் பலி..! கதறி அழுத சீமான்..!

827

தமிழகத்தில் நீண்ட வருடங்களாக திராவிட கட்சிகளே ஆட்சியில் இருந்து வருகிறது. இந்த அரசியலுக்கு எதிராக கட்சியை தொடங்கியவர் சீமான். வரும் சட்டமன்ற தேர்தலில் தனது கட்சியின் பலத்தை காட்டுவாரா என்று பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

இந்த நிலையில், நாம் தமிழர் கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளரும் தமிழ் முழக்கம் பதிப்பக உரிமையாளருமான தமிழ் உணர்வாளர் சாகுல் அமீது வைரஸ் தொற்றால் உயிரிழந்துள்ளார்.

அவரது இறுதி சடங்கு, சென்னை இராயப்பேட்டை பள்ளிவாசல் மயானத்தில் நடைபெற்றது. இதில் கலந்துக் கொண்ட சீமான், தலையில் அடித்துக் கொண்டு கதறி அழுதுள்ளார். இந்த சம்பவம், அருகில் இருந்தவர்கள் பலரையும் சோகத்தில் ஆழ்த்தியது.