ஜவ்வரிசியில் கலப்படம் செய்வதை தடுக்க சிசிடிவி கேமிராக்கள்

145

ஜவ்வரிசியில் கலப்படம் செய்வதை தடுக்க தமிழகத்தில் முதல் முறையாக  நாமக்கல்லில் ஜவ்வரிசி  ஆலைகளை  கண்காணிக்க சிசிடிவி கேமிரா கண்காணிப்பு மையம் திறக்க பட்டுள்ளது.

நாமக்கல் மாவட்ட ஜவ்வரிசி உற்பத்தியாளர்கள் சங்கம் சார்பில் துவங்கப்பட்டுள்ள இந்த மையத்தில் 25 ஆலைகள் ஒருங்கிணைக்கப் பட்டுள்ளன.

இத்திறப்பு விழாவில் ராசிபுரம், சேலம், ஆத்தூர் ,கெங்கவள்ளி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து ஜவ்வரிசி ஆலை உரிமையாளர்கள் சங்க பிரதிநிதிகள் 100 க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.