ரஜினிகாந்த் ஆதரவு கழகத்துக்கே! அதிமுக-வின் நமது அம்மா நாளிதழில் அறிவிப்பு!

874

நடிகர் ரஜினி கடந்த சில தினங்களுக்கு முன்பு கட்சி ஆரம்பிக்க இருப்பதாக அறிவித்திருந்தார். இந்த அறிவிப்பை இவர் வெளியிட்டதில் இருந்து, பல்வேறு தரப்பினர் எதிர்ப்பும், ஆதரவும் தெரிவித்திருந்தனர்.

மேலும், அதிமுக கட்சியை சேர்ந்த அமைச்சர் ஜெயக்குமார், ‘ரஜினி ஹீரோவா ஜீரோவா என்பதை மக்கள் தீர்மானிப்பார்கள்.. பார்ட் டைம் அரசியல்வாதி… அறைக்குள் அரசியல் நடத்தும் ஆன்மிக ஞானி’ என்றெல்லாம் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் ரஜினிகாந்த் பாஜகவின் நதிநீர் இணைப்பு திட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து பேட்டி அளித்துள்ளார்., இதையடுத்து, அதிமுக-வின் அதிகாரப்பூர்வ நாளேடான நமது அம்மாவில், காலா ஆதரவு கழகத்துக்கே என்று சொல்லி ஒரு வாழ்த்தையும் வெளியிட்டுள்ளது.

அதில் சொல்லி இருப்பதாவது:-

“பா.ஜ.க. தேர்தல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருக்கும் நதிநீர் இணைப்பு திட்டங்களை வரவேற்று இருக்கிறார் ரஜினிகாந்த். இதன் மூலம் தனது ஆதரவு பா.ஜனதா – அ.தி.மு.க. கூட்டணிக்கே என்பதை ரஜினிகாந்தின் குரல் உறுதி செய்திருக்கிறது.

125 வருட காவிரி நதிநீர் பிரச்சனைக்கு தீர்வு கண்டதும், முல்லைப் பெரியாறு உரிமையில் முதல்கட்ட வெற்றியை ஈட்டியதும், அரை நூற்றாண்டு கனவான அத்திக்கடவு- அவினாசி திட்டத்தை நிறைவேற்றிட ஆணையிட்டதும், தி.மு.க.

விரயமாக்கிய பழைய வீராணம் திட்டத்தை புதிய வீராணம் திட்டமாக்கி தலைநகர் சென்னையில் தாகம் தீர்த்ததும் அ.தி.மு.க. ஆட்சியில்தான். இதன் மூலம் அ.தி.மு.க. கூட்டணிக்கு தனது நல் ஆதரவை சூசகமாக தெரிவித்திருக்கிறார்.

ஏற்கனவே ‘காலா’ ஆதரவுகழகத்துக்கே என ‘நமது அம்மா’ நாளிதழ் வெளியிட்ட செய்தி இப்போது ஊர்ஜிதமாகி இருக்கிறது. ரஜினிகாந்தை வாழ்த்துவோம். வரவேற்போம்”

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of