இஸ்ரோவை பாராட்டிய பாக். வீராங்கனை | Pakistan | Namira Salim

405

பாகிஸ்தானுக்கும், இந்தியாவுக்கும் இடையே காஷ்மீர் விவகாரம் தொடர்பாக ஒரு பதற்றநிலை ஏற்பட்டு வார்த்தை போர் நடந்துவருகிறது. ஆனால் இந்த நிலையில், இஸ்ரோ நிறுவனம் மேற்கொண்ட சந்திரயான்-2 திட்டத்துக்காக பாகிஸ்தானின் முதல் விண்வெளி வீராங்கனை நமிரா சலீம் பாராட்டு தெரிவித்துள்ளார்.

நிலவின் தென்துருவத்தில் விக்ரம் லேண்டரை தரையிறக்கும் வரலாற்று முயற்சிக்காக இந்தியாவுக்கும், இஸ்ரோவுக்கும் நான் பாராட்டு தெரிவிக்கிறேன். சந்திரயான்-2 திட்டம் உண்மையிலேயே மிகப்பெரிய துணிச்சலான செயல். இது தெற்கு ஆசியாவுக்கு மட்டுமல்ல, ஒட்டுமொத்த உலக விண்வெளி ஆராய்ச்சிக்கே பெருமைக்குரியது என்று அவர் கூறினார்.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of