
தமிழ் சினிமாவின் முக்கியமான நடிகைகளில் ஒருவர் நமிதா. பல்வேறு முன்னணி நடிகர்களோடு இணைந்து நடித்துள்ள இவர், மார்கெட் குறைந்ததால், சினிமாவில் நடிப்பதை தவிர்த்து வந்தார்.
தற்போது, பௌவ் வெளவ் என்ற படத்தை தயாரித்து வரும் நமிதா, முக்கிய கதாபாத்திரம் ஒன்றிலும் நடித்திருக்கிறார். இந்நிலையில், அப்படத்தின் ஷீட்டிங் திருவனந்தபுரம் அருகே உள்ள வனப்பகுதியில் நடைபெற்று வந்தது.
அப்போது, திடீரென அருகில் இருந்த கிணற்றில், செல்போன் தவறி விழவே, அதனை பிடிப்பதற்கு முயற்சித்த நமிதாவும் உள்ளே விழுந்துள்ளார். இதனைப் பார்த்து, அதிர்ச்சி அடைந்த கிராம மக்கள், நமிதாவிற்கு உதவி செய்ய முயன்றுள்ளனர்.
ஆனால், அதன்பிறகே, அதுவும் படப்பிடிப்பு என்று தெரியவந்தது. இதனால், சிறிது நேரத்திற்கு, அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.