கருச்சிதைவு – “நான் மீண்டும் மீண்டு வந்தேன்” | Kajol

351

1997ம் ஆண்டு ராஜிவ் மேனன் இயக்கத்தில் வெளியான திரைப்படம் மின்னசர கனவு, இந்த படத்தின் மூலம் தமிழில் அறிமுகமான நடிகை தான் கஜோல். பாலிவுட் திரையுலகில் இவருக்கு நிகர் இவரே என்றால் அது மிகையல்ல. வசீகரிக்கும் கண்களால் ராசிகளை கவர்ந்தவர். பல ஆண்டுகள் கழித்து 2017ம் ஆண்டு வெளியான வேலை இல்லா பட்டதாரி படத்தின் மூலம் தமிழில் ரி-என்ட்ரி கொடுத்தார்.

தனது கணவர் அஜய்தேவ்கன் (பிரபல பாலிவுட் நடிகர்) மகள் நைசா மற்றும் மகன் யக் என்று குடும்ப வாழ்க்கையில் பிஸியாக உள்ள இவர், இப்போதும் சில படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் அண்மையில் கஜோல் அளித்துள்ள பேட்டியில், 2001ம் ஆண்டு. ‘கபி குஷி கபி கம்‘ பட காலகட்டத்தில் எனக்கு கருச்சிதைவு ஏற்பட்டது.

ajay-devan

படம் நன்றாக வந்திருந்தாலும் எனக்கு அது மகிழ்ச்சியான தருணமாக அமையவில்லை. மீண்டும் ஒருமுறை எனக்கு கருச்சிதைவு ஏற்பட்டது. முந்தைய அனுபவத்தைவிட இம்முறை அதிகம் நான் சிரமப்பட்டேன். தாங்கமுடியாத வலி. இருப்பினும் நான் மீண்டு வந்தேன், தற்போது எனது கணவர் மற்றும் குழந்தைகளோடு மிகவும் மகிழ்ச்சியாக உள்ளேன். நம் நாட்டை பொறுத்தவரை கருச்சிதைவுக்கு ஆளானவர்களை, ஒதுக்கி வைக்கிறார்கள். அது மிகவும் தவறு.

கருச்சிதைவு பற்றி குடும்பத்தினர் அந்த பெண்ணிடம் உரையாட வேண்டும். கருச்சிதைவு என்பது எல்லோருக்கும் இயல்பாக நேர்கின்ற ஒன்றுதான் என்று கூறினார்.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of