நான் கோவை சிறுமி பேசுகிறேன்! சிறப்பு தொகுப்பு!

1381

விதைக்கப்படும் விதையெல்லாம் மரமாக வளர்ந்து, காலம் முடிந்து பின்பு தான் விழுகிறது அல்லது வெட்டப்படுகிறது. ஆனால் இன்றைய நாட்களில் விதைகளே வெட்டப்படுகின்றன. அவ்வாறு வெட்டப்பட்ட விதைகளின் வரிசையில், இன்று நானும் இணைகிறேன். ஆம் நான் கோவை சிறுமி.

தாயின் மடி மீது தூக்கம், தந்தையின் விரல் பிடித்து பொடிநடை, நண்பர்களுடன் ரிங்கா ரிங்கா ரோசஸ் என்று பல்வேறு பூக்களால் அலங்காரம் செய்யப்பட்டது என் வாழ்க்கை. அந்த பூக்களில் வீசுகின்ற வாசம், பல சந்தன மலைகளுக்கு ஈடானது. ஆனால் இன்று ரத்த வாடை வீசுகிறது, தேனுக்கு பதிலாக கண்ணீர் தெறிக்கிறது, அழுகை சத்தம் காதை கிழிக்கிறது.

இதற்கெல்லாம் காரணம் அந்த மிருகங்கள் தான். என்னை விட்டுவிடுங்கள் என்று மழலை மொழியில் கெஞ்சினேனே காதில் விழவில்லையா? அல்லது அணு அளவும் கூட நெஞ்சில் ஈரமில்லையா?.

முருக்கு மீசை குத்தும் என்று மீசையை மழித்த என் தந்தைக்கு நான் என்ன சொல்வேன், என்னை கத்தியால் குத்தி கொன்றார்கள் என்றா? என் மீது துளி வெந்நீர் பட்டாலே துடித்துப் போவாளே என் தாய், அவளிடம் என்ன சொல்வேன், என் உடலை அந்த மிருகங்கள் சிதைத்தது என்றா? போதும் என்னால் தாங்க முடியவில்லை, மீதம் நான் பட்ட கஷ்டத்தை என் உடலில் இருந்து சிதறிய குருதியிடம் கேளுங்கள்.

இச்சை திண்ணுகின்ற கொச்சை நாய்களே, இரக்கம் இல்லாத மனிதப் பேய்களே என் தந்தையின் உதட்டில் இருந்த சிரிப்பு, என்னோடு இறந்து விட்டது, என் தாயின் முகப்பொழிவு, என்னை கொண்டு சென்ற போதே புதைந்து விட்டது. உங்களால் அதை திருப்பித்தர முடியுமா.

என்னை ஏன் சிதைத்தீர்கள், நான் அணிந்து வந்த உடையா? கிருக்கர்களே நான் சிறுமி. தாயை பார்த்தும் காமம் கொள்வாயா, உன் தாரமாய் கருதி. உங்களின் இந்த காமநோய்க்கு சட்டம் என்ற மருந்து சரியில்லை. இந்த கொடூரத்துக்கு ஆளான கடைசி உயிர் நானாக இருக்கட்டும். இனியாவது தயவு செய்து திருந்துங்கள் ஆண்களே. உங்கள் மகளுக்கு இது நிகழாமல் இருக்க அந்த கடவுளிடம் கேட்டுக்கொள்கிறேன். அணைவரையும் மகளாய் பாருங்கள், உங்களை வேண்டிக் கேட்கிறேன்.

இப்படிக்கு

நான் கோவை சிறுமி

Advertisement

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of