அண்மையில் பெண்களை முன்னிலை படுத்தும் பல படங்கள் வெளியாகி வருகின்றன. இந்நிலையில் தற்போது நந்திதா ஸ்வேதா நடிப்பில் IPC 376 என்ற ஆக்ஷன் ஹாரர் கலந்த மாஸ் கமர்சியல் படம் உருவாகி வருகிறது.
படத்தில் ஆக்ஷன் காட்சிகள் அதிகமாக உள்ளதென்று படக்குழு தெரிவித்துள்ளது. இந்த படத்தில் நான்கு சண்டைக்காட்சிகள் உள்ளன. மேலும் இப்படத்தில் பெரும்பாலும் டூப் இல்லாமலே துணிச்சலாக நடித்துள்ளார் நந்திதா ஸ்வேதா.
சூப்பர் சூப்பராயன் அமைத்த சண்டைக்காட்சிகள் மிகச்சிறப்பாக வந்துள்ளதாக தகல்வல்கள் தெரிவிக்கின்றன. சண்டைக்காட்சிகளில் நந்திதா ஸ்வேதாவுக்கு ரத்தக்காயம் ஏற்பட்ட போதும், அதையெல்லாம் பொருட்படுத்தாமல் சிரத்தை எடுத்து ஒத்துழைப்பு கொடுத்துள்ளார்.