“ஒரு மணி நேரத்திற்கு ஒரு இளைஞன் வேலையின்றி தற்கொலை” – நாஞ்சில் சம்பத்

633

நீலகிரியில் குடியுரிமை சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, கூடலூர் சட்டமன்ற உறுப்பினர் திராவிடமணி தலைமையில் கண்டன பேரணி நடைபெற்றது. இதில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்துக்கொண்டு தங்களது எதிர்ப்பை தெரிவித்தனர்.

அப்போது பேசிய பேச்சாளர் நாஞ்சில் சம்பத், இந்தியாவின் பொருளாதாரம் ICU-வில் இருப்பதாக, முன்னாள் பொருளாதார நிதி ஆலோசகர் கூறியுள்ளார் என்று குறிப்பிட்டார்.

மேலும், பாஜக ஆளும் மாநிலங்களில், குடியுரிமை சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்த பலர் சுட்டுக்கொள்ளப்பட்டுள்ளதாக கூறினார்.

இதனைத்தொடர்ந்து பேசிய சட்டமன்ற உறுப்பினர் திராவிட மணி, குடியுரிமை சட்டத்தை அமல்படுத்தக் கூடாது என்று ஸ்டாலின் மேற்கொண்ட முயற்சிகளை, எடப்பாடி பழனிசாமி அரசு பொருட்படுத்தவில்லை என குற்றம்சாட்டினார்.

மேலும், இலங்கையில் இருந்து வந்துள்ள மக்களிடம் இரட்டை குடியுரிமை பெற்றுத் தருவதாக கூறி, அதிமுக-வினர் 25 ஆயிரம் ரூபாய் வசூலித்து வருவதாக குற்றம்சாட்டினார்.

Advertisement

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of