கிரண்பேடியிடம் மோதிய நாராயணசாமி! இந்த முறை அதுக்கு இல்ல இதுக்கு தான்!

509

புதுச்சேரியில், மாநில பட்ஜெட் இம்மாத இறுதியில் தாக்கல் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. பட்ஜெட்டுக்கு நிதி ஒதுக்கீடு செய்வது உள்ளிட்டவை குறித்து ஆலோசிப்பதற்காக தலைமை செயலகத்தில் மாநில திட்டக்குழு கூட்டம், அதன் தலைவர் ஆளுநர் கிரண்பேடி தலைமையில் நடைபெற்றது.

இதில் முதலமைச்சர் நாராயணசாமி, அமைச்சர்கள், எம்.பி. வைத்திலிங்கம் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இந்நிலையில், கூட்டம் நடைபெற்று கொண்டிருந்தபோதே, முதல்வர் நாராயணசாமி மற்றும் அமைச்சர்கள் கூட்டத்திலிருந்து திடீரென வெளிநடப்பு செய்தனர்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய முதல்வர் நாராயணசாமி, திட்டக்குழு கூட்டத்திற்கு அதிமுக, திமுக, பாஜகவை சேர்ந்த சட்டமன்ற கட்சி தலைவர்களை அழைக்காததை கண்டித்து வெளிநடப்பு செய்ததாக தெரிவித்தார்.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of