சிறந்த ஆசிரியர்களுக்கு நல்லாசிரியர் விருதுகளை ஆளுநர் மற்றும் முதலமைச்சர் வழங்கினர்

543

புதுச்சேரியில் நடைபெற்ற ஆசிரியர் தின விழாவில் சிறந்த ஆசிரியர்களுக்கு நல்லாசிரியர் விருதுகளை ஆளுநர் மற்றும் முதலமைச்சர் வழங்கி கௌரவித்தனர்.

புதுச்சேரி அரசின் கல்வித்துறை சார்பில் வில்லியனூரில் ஆசிரியர் தினம் கொண்டாடப்பட்டது. இதில் துணைநிலை ஆளுநர் கிரண்பேடி மற்றும் முதலமைச்சர் நாராயணசாமி ஆகியோர் கலந்துகொண்டு, 20 ஆசிரியர்களுக்கு நல்லாசிரியர் விருதுகளை வழங்கி கௌரவித்தனர்.

மேலும் ஆசிரியர் தின சிறப்பு மலரையும் இருவரும் வெளியிட்டனர். ஓய்வு பெறவுள்ள ஆசிரியர்களும், சிறப்பு விருந்தினர்களால் விழாவில் கௌரவிக்கப்பட்டனர்.

Advertisement