அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு

273

மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி ஜனவரி மாதம் முதல் 9 சதவீதத்தில் இருந்து 12 சதவீதமாக உயர்த்தப்பட்டு அதற்கான அறிவிப்பு இந்த மாதம் வெளியிடப்பட்டது.

இதனைத்தொடர்ந்து புதுச்சேரி அரசு ஊழியர்களுக்கு இந்தாண்டு ஜனவரி முதல் அகவிலைப்படியை 9 சதவீதத்தில் இருந்து 12 சதவீதமாக உயர்த்தி அதற்கான ஒப்புதலை முதலமைச்சர் நாராயணசாமி அளித்துள்ளார்.

இதற்கான அரசாணை நிதித்துறையின் மூலம் வெளியிடப்பட்டு, உயர்த்தப்பட்ட அகவிலைப்படி, அரசு ஊழியர்களின் மார்ச் மாதத்துடன் சேர்ந்து வழங்கப்படும் இதற்காக புதுவை அரசுக்கு மாதம் ஒன்றுக்கு ரூ.3.60 கோடி கூடுதல் செலவாகும் என தெரிவித்தார்.