ஆட்சி மாற்றம் என கூறுபவர்களை சிறையில் போட வேண்டும்- நாராயணசாமி ஆவேசம்

406

புதுவை பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் வைத்திலிங்கத்தை ஆதரித்து முதல்-அமைச்சர் நாராயணசாமி தனது தொகுதியான நெல்லித்தோப்பில் பிரச்சாரம் செய்தார்.

பின்னர் முதலமைச்சர் நாராயணசாமி நிருபர்களிடம் கூறுகையில்,

தமிழகம், புதுவையில் காங்கிரஸ், தி.மு.க. கூட்டணி அமோக வெற்றி பெறும். கூட்டணி கட்சி தலைவர்கள் கூறியது போல நாளை நமது 40-ம் நமதே என்ற வகையில் எங்கள் கூட்டணி வெற்றி பெறும். பிரதமர் மோடியை மக்கள் எதிர்க்கின்றனர்.

இவர் கடந்த 5 ஆண்டுகளில் எந்த நன்மையும் செய்யவில்லை. கொடுத்த வாக்குறுதிகளை அவர் நிறைவேற்றவில்லை. பண மதிப்பிழப்பு, ஜி.எஸ்.டி. வரி விதிப்பால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆனால் ராகுல்காந்தி ஏழைகளுக்காக அறிவித்துள்ள வறுமை ஒழிப்பு திட்டம் எந்த நாட்டிலும் இல்லாத புரட்சிகர திட்டம். புதுவை காங்கிரஸ் கூட்டணி அரசு நல்ல திட்டங்களை நிறைவேற்றியுள்ளோம்.

புதுவையில் ஆட்சிமாற்றம் என நாங்கள் ஆட்சிக்கு வந்தது முதல் கூறி வருகின்றனர். ஆட்சி மாற்றம் என்பதை மக்கள் தான் முடிவு செய்ய வேண்டும். புதுவையில் ஆட்சி மாற்றம் என கூறுபவர்களை உள்ளே தூக்கிபோட வேண்டும். இனி அது தான் நடக்க போகிறது. குதிரை பேரத்தில் ஈடுபட்டு ஆட்சி மாற்றம் ஏற்படும் என கூறுபவர்களை சிறையில் தள்ள வேண்டும்.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of