தமிழக அரசின் முடிவை பொறுத்தே ஊரடங்கை நீட்டிப்பது குறித்து அறிவிக்கப்படும் – நாராயணசாமி

333

தமிழக அரசின் முடிவை பொறுத்தே, புதுச்சேரியில் ஊரடங்கை நீட்டிப்பது குறித்து அறிவிக்கப்படும் என முதலமைச்சர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து பேசிய அவர், பிரதமர் மோடியுடனான ஆலோசனையின் போது, பல்வேறு மாநில முதலமைச்சர்கள் ஊரடங்கு உத்தரவை நீட்டிக்க வேண்டும் என்று வலியுறுத்தியதாக தெரிவித்தார்.

மாநிலங்களில் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் மற்றும் மாநிலங்களுக்கு அதிக அளவில் நிதியை விடுவிக்க வேண்டும் என்று பிரதமரிடம் வேண்டுகோள் விடுத்ததாக கூறினார்.

புதுச்சேரி மாநிலத்திற்கு இடைக்கால நிவாரணமாக 300 கோடியும், மக்களுக்கு மருத்துவமனை உள்ளிட்ட கட்டமைப்புகளை மேம்படுத்த 995 கோடியும் வழங்க வேண்டும் என வலியுறுத்தி உள்ளதாக தெரிவித்தார்.

Advertisement

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of