சர்வதேச போக்குவரத்து மேம்பாட்டு மாநாட்டை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைக்கிறார்

646

நிதி ஆயோக் அமைப்பு ஒருங்கிணைக்கும் இந்த மாநாடு, மின்சாரம் மூலமாக இயங்கும் வாகனங்கள், பொதுப் போக்குவரத்து ஆகியவற்றை ஊக்குவிப்பதை மையமாகக் கொண்டு நடைபெறவுள்ளது.

இரண்டு நாட்கள் நடைபெறும் இந்த மாநாட்டில் மத்திய அமைச்சர்கள் அருண் ஜெட்லி, நிதின் கட்கரி, பியூஷ் கோயல், ரவி சங்கர் பிரசாத் உள்ளிட்டோர் கலந்து கொள்கின்றனர். இந்த மாநாட்டை தொடங்கி வைக்கும் பிரதமர் மோடி, முன்னணி நிறுவனங்களைச் சேர்ந்த 30க்கும் மேற்பட்ட தலைமை நிர்வாக அதிகாரிகளுடன் கலந்துரையாட உள்ளார்.

அப்போது, மாற்று எரிபொருள்களுடன் இயங்கும் வாகனங்கள் மற்றும் மின்சாரத்தில் இயங்கும் வாகனங்களை இந்தியாவில் உற்பத்தி செய்வதை விரைவுபடுத்தும் திட்டத்தின் 2ஆம் கட்டம் குறித்து ஆலோசிக்க உள்ளார். பொதுப் போக்குவரத்து மறுஉருவாக்கம், மாற்று எரிபொருள் உள்ளிட்ட 5 முக்கிய கருப்பொருள்கள் மாநாட்டில் ஆலோசிக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of