நாட்டு மக்களுக்கு பிரதமர் இன்று உரை

1031

21 நாள் ஊரடங்கு உத்தரவு இன்று நிறைவடைய உள்ள நிலையில், பிரதமர் மோடி இன்று காலை 10 மணிக்கு நாட்டு மக்களுக்கு உரையாற்ற உள்ளார்.

கொரோனா வைரஸ் பரவுவதை தடுப்பதற்காக பிறப்பிக்கப்பட்ட 21 நாள் ஊரடங்கு உத்தரவு இன்று முடிவுக்கு வருகிறது. ஆனால், தற்போது வரை கொரோனா வைரஸ் தாக்கம் குறையாததால், ஊரடங்கை நீட்டிக்க வேண்டும் என பல மாநிலங்கள் பிரதமர் மோடியிடம் பரிந்துரைத்துள்ளன. தமிழகம் உள்ளிட்ட 7 மாநிலங்கள் தாங்களாகவே ஊரடங்கை நீட்டித்துள்ளன.

இந்நிலையில் ஊரடங்கு உத்தரவு நீட்டிப்பு தொடர்பாக பிரதமர் மோடி இன்று காலை நாட்டு மக்களுக்கு உரையாற்ற உள்ளார். இதில் கொரோனா பாதிப்பின் அடிப்படையில், நாட்டை மூன்று மண்டலமாக பிரித்து, ஊரடங்கை சில தளர்வுகளுடன் நீட்டிப்பது தொடர்பான அறிவிப்பை பிரதமர் மோடி வெளியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement