துப்புரவு தொழிலாளர்களின் காலை கழுவிய மோடி.., என்ன நடக்குது?

1017

உத்தரப் பிரதேசத்தில் பிரயாக்ராஜ் நகரில் நடக்கிற கும்பமேளா மிகவும் பிரசித்திப் பெற்றது. இந்த விழாவை முன்னிட்டு, உலகெங்கிலும் இருந்து கோடிக்கணக்கான மக்கள் புனித நீராடுவது வழக்கம்.அந்த வகையில் கங்கை, யமுனை, சரஸ்வதி ஆகிய புண்ணிய நதிகள் சங்கமிக்கும் திரிவேணி சங்கமத்தில் கும்பமேளா கோலாகலமாக தொடங்கி நடைபெற்று வருகிறது. அடுத்த மாதம் 4 ஆம் தேதி வரை தொடர்ந்து 50 நாட்கள் இந்த விழா நடைபெறுகிறது.

இந்நிலையில், கும்பமேளாவில் புனித நீராட பிரதமர் மோடி இன்று சென்றார். அங்கு, துப்புரவு தொழிலாளிகளின் காலை கழுவி மரியாதை செலுத்தினார். அதனைத்தொடர்ந்து, புனித நீராடிய அவர், கங்கை ஆற்றுக்கு ஆரத்தி காண்பித்து பரவசத்துடன் வழிபட்டார்.

Advertisement

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of