அரசியல் புரோக்கர் செய்யும் வேலையை மோடி செய்யலாமா?

299

அரசியல் புரோக்கர் செய்யும் வேலையை பிரதமர் மோடி செய்யலாமா? என தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.

கரூரை அடுத்த திருமாநிலையூரில் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாற்றுக் கட்சியினர் தி.மு.க.வில் இணைந்தனர்.

இந்த கூட்டத்தில் பேசிய மு.க.ஸ்டாலின், கட்சியை உடைப்பது, இணைப்பது என அரசியல் புரோக்கர் செய்யும் வேலையை பிரதமர் மோடி செய்யலாமா? என கேள்வி எழுப்பினார்.

தேர்தல் எனும் ஜனநாயக போருக்கு தயாராகுமாறு தி.மு.க.வினரை கேட்டுக்கொண்டார்.

மத்தியிலும் மாநிலத்திலும், எந்த நேரத்திலும் ஆட்சி மாற்றம் ஏற்பாட வாய்ப்பு உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.