இஸ்ரோவின் முயற்சியை பாராட்டிய நாசா | ISRO | NASA | Chandrayaan 2

362

சந்திரயான் 2 விண்கலத்தின் விக்ரம் லேண்டர் கடந்த 7ம் தேதி அதிகாலை 1.30 மணிக்கு நிலவின் மேற்பரப்பில் தரை இறங்கியது. இதையடுத்து, சுமார் 35 கிலோ மீட்டர் தொலைவில் இருந்து லேண்டர் நிலவை நோக்கி செல்ல தொடங்கியது.

400 மீட்டரில் வந்த விக்ரம் லேண்டர் தரை இறங்கும் இடத்தை தேர்வு செய்து தரை இறங்கிய போது அதிக வேகத்தில் இறங்கியதாகவும் லேண்டரில் இருந்து எவ்வித சிக்னலும் வரவில்லை எனவும், 2.1 கிலோ மீட்டர் தொலைவில் இருந்தபோது லேண்டரின் தகவல் துண்டிக்கப்பட்டதாக இஸ்ரோ அறிவித்தது.

இதையடுத்து, பிரதமர் மோடி இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு ஆறுதல் கூறும் வகையில் உரையாற்றினார். இந்நிலையில், நிலவில் தரையிறங்கும் இஸ்ரோவின் முயற்சிக்கு அமெரிக்க விண்வெளி ஆய்வு மையமான நாசா பாராட்டு தெரிவித்துள்ளது.

Advertisement

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of