செவ்வாயில் எடுக்கப்பட்ட வியக்க வைக்கும் வீடியோவை வெளியிட்டது நாசா

428

அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசா செவ்வாய் கிரக ஆராய்ச்சிக்கான பெர்சிவரன்ஸ் ரோவர் என்ற ஆய்வு விண்கலத்தை கடந்த ஆண்டு ஜூலை மாதம் விண்ணில் செலுத்தியது. பெர்சிவரன்ஸ் ரோவர் விண்கலம் செவ்வாய் கிரகத்தின் ஜெசிரோ பள்ளத்தில் சில நாட்களுக்கு முன்பு வெற்றிகரமாக தரையிறங்கியது.

இந்த நிலையில் செவ்வாய் கிரகத்தில் பெர்சிவரன்ஸ் ரோவர் விண்கலத்தை தரையிறக்கும் போது எடுக்கப்பட்ட முதல் வீடியோவை நாசா வெளியிட்டுள்ளது. பெர்சவரன்ஸ் ரோவர் செவ்வாய் கிரகத்தை நெருங்கும் வேளையில் கடைசி நிமிடத்தில் எடுக்கப்பட்ட இந்த வீடியோவில், பறந்து கொண்டிருக்கும் விண்கலத்திலிருந்து பாராசூட் மூலமாக பெர்சிவரன்ஸ் ரோவர் விடுபட்டு 2 கிலோ மீட்டர் தூரத்திற்கு கயிறு மூலம் கீழே இறக்கப்பட்டு மணற் பாங்கான இடத்தில் இறங்கும் காட்சிகள் அதில் இடம்பெற்றுள்ளது. ரோவர் துல்லியமாக தரையிறங்கும் வீடியாவில் நாசா விஞ்ஞானிகள் உற்சாகம் அடைந்துள்ளனர். இவை உண்மையில் அற்புதமான வீடியோக்கள் என்று நாசா விஞ்ஞானிகள் பலரும் கருத்து தெரிவித்துள்ளனர்.

Advertisement