செவ்வாயில் கட்டுமானப் பணியா? நாசா நடத்திய போட்டி! ஜெயித்தது யார் தெரியுமா?

696

நாசா விண்வெளி நிறுவனம் சமீபத்தில் ‘மார்ஸ் 3டி பிரிண்ட் ஹேபிடேட் சேலன்ஜ்’ என்று அழைக்கப்படும் போட்டியை நடத்தியது. அப்போட்டியில் பங்கேற்பவர்கள் செவ்வாய் கிரகத்தில் விண்வெளி வீரர்கள் பயன்படுத்தக்கூடிய ஒரு இருப்பிட மாதிரியை உருவாக்க வேண்டும் என சவால் விடுக்கப்பட்டது.

மேலும், மனிதர்களுக்கான இருப்பிடத்தை கட்டமைப்பதற்காக செவ்வாய் கிரகத்திற்கு எந்தவொரு கட்டுமான பொருட்களையும் எடுத்துச் செல்லக்கூடாது என்றும், அதாவது முற்றிலும் மறுசுழற்சி செய்யப்பட்ட பொருட்கள் மற்றும் செவ்வாய் கிரகத்தில் கிடைக்கும் மற்ற பொருட்களைப் மட்டுமே பயன்படுத்தவேண்டும் என்று இப்போட்டியின் முக்கிய விதிமுறை விதிக்கப்பட்டது.

மேலும் கட்டுமானத்தில் அதிக மனித தலையீடு இல்லாமல் இருக்கும் வகையில் கட்டுமானத்திற்கு பயன்படும் வகையிலான ரோபோக்களையும் உருவாக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டது. மொத்தமாக 60 போட்டியாளர்கள் பங்கேற்ற இந்த போட்டியில், கட்டடக்கலை மற்றும் தொழில்நுட்ப வடிவமைப்பு நிறுவனமான ஏஐ ஸ்பேஸ்பேக்டரி, அதன் ‘மார்ஷா மார்ஸ் ஹேபிடேட்’ இருப்பிட மாதிரிக்காக முதல் பரிசை தட்டிச்சென்றது.

இந்த இருப்பிட மாதிரியில் செவ்வாயில் கிடைக்கும் இயற்கையான பொருட்களை கொண்டு மக்கும் தன்மையுள்ள மற்றும் மறுசுழற்சி செய்யக்கூடிய கருங்கல் கலவையை கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது.

இந்த மாதிரி இருப்பிடம் நாசாவின் அழுத்தம், புகை, மற்றும் தாக்க சோதனைகள் கடந்து, அனைத்து போட்டியாளர்களின் மாதிரிகளிலேயே மிகவும் நீடித்து நிலைத்த கட்டுமானமாக இருந்துள்ளது. இந்த போட்டியை நாசா நடத்தியதில் இருந்து, வின்வெளியில் கட்டுமானம் கட்டும் திட்டம் இருக்கிறதா என்ற கேள்வியும் மக்கள் மனதில் எழுந்துள்ளது.

Advertisement

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of