இன்னும் 80 ஆண்டுகள் தான்.. உலக மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்திய நாசா..!

7464

மனிதன் ஒவ்வொரு வளத்தையும் சுரண்டுவதன் காரணமாக, பல்வேறு பாதிப்புகளை உலகிற்கு ஏற்படுத்தி வருகிறான். இதன்காரணமாக, மழை பொய்த்து போதல், புவி வெப்பமடைதல் உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகள் ஏற்படுகிறது.

இதற்கிடையே, கடல் நீர் மட்டம் உயர்வு குறித்து நாசா ஆய்வு நடத்தியுள்ளது. அதில், 2100-ம் ஆண்டுக்குள் உலக கடல் நீர்மட்ட உயர்வு 8 முதல் 27 சென்டிமீட்டர் அளவு இருக்கும் என்றும், அண்டார்டிகாவில் 3 முதல் 28 சென்டி மீட்டர் வரை உயரக்கூடும் என்றும் நாசா தெரிவித்துள்ளது.

பசுமை இல்லா வாயுகள் வெளியேற்றம் தொடர்ந்தால் கிரின்லாந்து மற்றும் அண்டார்டிக்காவில் பனிக்கட்டிகள் உருகி 2100-ம் ஆண்டுக்குள் உலக கடல் நீமட்டம் 38 சென்டி மீட்டருக்கும் அதிகமான அளவுக்கு உயரும் என்று நாசா தலைமையில் நடந்த ஆய்வில் தெரியவந்துள்ளது. இந்த தகவல் உலக மக்கள் பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.