விக்ரம் லேண்டர் – நாசா அறிவிப்பால் நொறுங்கிய இஸ்ரோ

896

நிலவின் தென்துருவத்தை ஆய்வு செய்வதற்காக இந்தியாவின் இஸ்ரோ அனுப்பி வைத்த விக்ரம் லேண்டர் கடைசி நேரத்தில் தரை கட்டுப்பாட்டு நிலையத்துடனான தொடர்பை இழந்தது.

இதனால் மிகுந்த ஏமாற்றமடைந்த இஸ்ரோ விஞ்ஞானிகள் விக்ரம் லேண்டரை தொடர்பு கொள்ளும் முயற்சியில் தீவிரம் காட்டினர். இஸ்ரோவுடன் கைக்கோர்த்த அமெரிக்காவின் நாசாவும், லேண்டரை தொடர்பு கொள்ள முயற்சி செய்தது.

இந்நிலையில் 2009ம் ஆண்டு நாசா அனுப்பிய புலனாய்வு ஆர்பிட்டர் நிலவை சுற்றி வருகிறது. இது விக்ரம் லேண்டர் விழுந்து கிடக்கும் பகுதிக்கு மேலே சென்ற போது லேண்டருடன் சமிக்ஞை ஏற்படுத்த நாசா முயற்சித்தது.

இந்நிலையில் விக்ரம் லேண்டரை படம் பிடிக்க முடியவில்லை என்றும் சமிக்ஞை மூலமாகவும் விக்ரமுடன் தொடர்பை ஏற்படுத்த முடியவில்லை எனவும் நாசா தெரிவித்துள்ளதால் இந்தியாவின் கடைசி நம்பிக்கையும் நொருங்கியுள்ளது.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of