ஹெலோ.. விக்ரம் லேண்டரா..? மெசேஜ் அனுப்பிய நாசா..! அருமையான காரணம்..!

1238

இந்தியாவின் விண்வெளி ஆராய்ச்சி மையமான இஸ்ரோவின் மூலம், நிலவின் தென்துருவப்பகுதிக்கு சந்திரயான் 2 என்ற விண்கலம் அனுப்பப்பட்டது. இந்த விண்கலம் கடந்த 7-ஆம் தேதி அன்று, அதிகாலை 1 மணியிலிருந்து 2 மணிக்குள் தரையிறங்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் சிக்னல் கிடைக்காமல் இணைப்பு துண்டிக்கப்பட்டது. இதையடுத்து சிக்னல் கிடைப்பதற்காக இஸ்ரோ விஞ்ஞானிகள் போராடி வந்த நிலையில், நாசா விஞ்ஞானிகளும் ஆதரவு கை கொடுத்துள்ளனர்.

ஆம், விக்ரம் லேண்டருடன் இணைப்பை ஏற்படுத்த, இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு நாசா உதவி செய்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக விக்ரம் லேண்டருக்கு ஹெலோ என்ற மெசேஜை நாசா அனுப்பியுள்ளது.

நாசாவின் ஆன்டனாக்கள் மூலம் மெசேஜ் அனுப்பப்பட்டு, நிலவில் இருந்து எதிரொலிக்கப்படும் அதிர்வெண்கள் குறித்த தகவல்கள் சேகரிக்கப்பட்டு வருகிறது. இஸ்ரோவின் அனுமதியுடன் நாசா இந்த நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறது.