கணிக்கப்பட்டதை விட நிலவில் அதிகளவு நீர்? – நாசா

849

கடந்த பத்தாண்டுகளுக்கு முன்னர் சந்திரனின் மேற்பரப்பு வறண்டதாக கூறப்பட்டது. ஆனால் தொடர்ச்சியான கண்டுபிடிப்புகள் நிலவின் மேற்பரப்பு நீர் மூலக்கூறுக்கான தடயங்களைக் கொண்டிருப்பதாகக் கண்டறியப்பட்டது.

இந்நிலையில், நாசா வெளியிட்டுள்ள அறிவிப்பில், இரண்டு புதிய ஆய்வுகளின்படி சந்திரனில் முன்பு நினைத்ததை விட அதிகமான நீர் இருக்கக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதிய ஆய்வின் மூலம் நிலவில் சூரிய ஒளி உள்ள பகுதிகளில் கூட சந்திரன் மூலக்கூறு நீரை வைத்திருக்கிறது என்பதற்கு மேலும் ரசாயன ஆதாரம் கிடைத்துள்ளது என்றும் மேலும் தொடர் ஆராய்ச்சிகள் மூலம் நீர் எங்கிருந்து வந்திருக்கலாம், அது எவ்வாறு சேமிக்கப்படுகிறது என்பதை நன்கு புரிந்துகொள்ள முடிவும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சில இடங்களில் தண்ணீர் ஏராளமாக இருப்பதைக் கண்டால், அதை மனித ஆய்வுக்கான வளமாகப் பயன்படுத்தலாம் என்றும் இது குடிநீர், சுவாசிக்கக்கூடிய ஆக்ஸிஜன் மற்றும் ராக்கெட் எரிபொருளாக பயன்படுத்தப்படலாம் எனவும் நாசா விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

Advertisement