“நாட்டின் தற்போதைய பொருளாதார நிலைக்கு ப.சிதம்பரமே காரணம்” – பிரகாஷ் ஜவடேகர்

491

நாட்டின்  தற்போதைய பொருளாதார மந்தத்திற்கு ப.சிதம்பரம் தான் காரணம் என மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேட்டியளித்த அவர், நாட்டின் பொருளாதார நிலைக்கு முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் தான் காரணம் என தெரிவித்தார்.

இந்தியாவில் பொருளாதாரம் மந்தம் காரணமாக உலக அரங்கில் தொடர்ந்து சரிவை சந்தித்து வருகிறது. இந்தியாவின் பொருளாதார நிலை குறித்து பல்வேறு பொருளாதார நிபுணர்கள் வருத்தம் தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில், பொருளாதார மந்தத்திற்கு ப.சிதம்பரம் தான் காரணம் என மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.