சிறுமி பாலியல் வன்கொடுமை – தேசிய குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையம் விசாரணை

143

அறந்தாங்கியில் 7 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில், தேசிய குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையம் தாமாக முன்வந்து விசாரணைக்கு ஏற்றுக் கொள்ளப்பட்டது.

புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவில் தாலுகா, ஏம்பல் மேலகுடியிருப்பு கிராமத்தை சேர்ந்த நாகூரான்- செல்வி தம்பதியினரின் 7 வயது மகள் திடீரென மாயமானர்.

இதுகுறித்து ஏம்பல் காவல் நிலையத்தில் தந்தை புகார் செய்தார். புகாரின் பேரில் வழக்கு பதிந்து காவல்துறையால் தேடப்பட்டு வந்த நிலையில், இன்று கிளவிதம்மம் ஊரணியில், உடலில் காயங்களுடன் சிறுமி சடலமாக மீட்கப்பட்டது.

மீட்கப்பட்ட உடல்  புதுக்கோட்டை மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து காவல்துறையிநர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த நிலையில், சிறுமி கொலை செய்யப்பட்ட வழக்கில், தேசிய குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையம் தாமாக முன்வந்து விசாரணைக்கு ஏற்றுக் கொள்ளப்பட்டது.

Advertisement

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of