“ஒரு விரல்.., ஒரே விரல் தான்..,!” 112 அடி நீளத்தில் செய்யப்பட்ட மாபெரும் உலக சாதனை!

641

உலகின் பல்வேறு பகுதிகளில் பல்வேறு தரப்பினர், வித்தியாச வித்தியாசமான உலக சாதனைகளை செய்து கொண்டு வருகின்றனர். இதுபோன்ற வித்தியாசமான உலக சாதனை தமிழகத்தில் தற்போது நடைபெற்றுள்ளது.

73 வது சுதந்திர தினம் மற்றும் அப்துல் கலாமின் 4-ஆம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி, திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டையில் மிகவும் பிரம்மாண்டமான உலக சாதனை ஒன்று படைக்கப்பட்டுள்ளது.

அது என்னவென்றால், கட்டவிரல் ரேகையை வைத்து தேசியக்கொடி வரையப்பட்டுள்ளது.

73-வது சுதந்திர தினம் என்பதால் 73 நபர்களை கொண்டு உருவாக்கப்பட்ட தேசியக்கொடி, 112 அடி நீளமும் 5 அடி அகலமும் கொண்டது.

இதுகுறித்து பேசிய நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள், உலக சாதனை என்பது, உடனே நடந்து விடக்கூடிய விஷயம் அல்ல. அதற்கான, முயற்சியும், எழுச்சியும் வேண்டும் என்று கூறினார்.

மேலும், தமிழகத்தில் இது போல இன்னும் பல சாதனை முயற்சிகளை செய்ய வேண்டும் என்றும் அவர்கள் தெரிவித்தனர்.

Advertisement

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of