பெண் குழந்தைகள் பாதுகாப்பு தினம்: உறுதிமொழி எடுக்க கட்டளையிட்ட பள்ளிக்கல்வித்துறை

194

மாநில பெண் குழந்தைகள் பாதுகாப்பு தினமான இன்று (பிப்.24) அனைத்து பள்ளிகளிலும் மாணவர்கள் உறுதிமொழி ஏற்க வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

மறைந்த முதல்வர் ஜெ.ஜெயலலிதாவின் பிறந்த நாளான பிப்ரவரி 24-ம் தேதியை ஆண்டுதோறும் மாநில பெண் குழந்தைகள் பாதுகாப்பு தினமாக கொண்டாட தமிழக அரசு முடிவு செய்துள்ளது.

அதன்படி அனைத்து வகை பள்ளிகளிலும் பெண் குழந்தைகள் பாதுகாப்பு வலியுறுத்தி இன்று (பிப்.24) மனித சங்கிலி, பேரணி, உறுதிமொழி ஏற்பு, கருத்தரங்கம் உட்பட நிகழ்ச்சிகளை நடத்தபள்ளிக்கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of