“தீபாவளிக்கு பத்திரமா இருங்க..” – தேசிய புலனாய்வு முகமையின் அதிர்ச்சி தகவல்..

884

இந்தியாவில் பல்வேறு ஜாதி, மதம் மற்றும் மொழிகள் உள்ளன. இவை அணைத்தையும் ஒன்று சேர்க்கும் ஒரு பண்டிகை என்றால், அது தீபாவளி தான்.

இதனால் இந்த பண்டிகையையொட்டி, அமேசான் மற்றும் பிளிப்கார்ட் போன்ற நிறுவனங்களும் இந்த சமயங்களில் அதிரடி ஆஃபர்களை அளித்து வருகிறது என்றும் கூறப்படுகிறது.

அதாவது, இந்த பண்டிகையின் போது, அணைத்து தரப்பினரும் ஷாப்பிங் செய்வார்களாம். இந்த பண்டிகையின்போது, இந்தியா முழுவதுமே சந்தோஷ வெடிகளால் மினுமினுக்கும்.

இந்த தீபாவளி பண்டிகையின் போது ஒரு சிறு அசாம்பாவிதம் நடந்தாளும், அது நாடு முழுக்கும் பெரும் பரபரப்பையும், கவலையையும் ஏற்படுத்திவிடும். இந்நிலையில் தேசிய புலனாய்வு முகமை, ஒரு எச்சரிக்கை தகவலை அளித்துள்ளது.

அதன்படி, இந்தியா – நேபாளம் எல்லைப் பகுதியில் உள்ள கோரக்பூரில் 5 தீவிரவாதிகளின் நடமாட்டம் இருப்பதாகவும், அவர்கள் நோபாளம் வழியாக இந்தியாவில் நுழைந்து, தீபாவளி பண்டிகையின்போது பெரும் தாக்குதலை நடத்த திட்டமிட்டிருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

இந்த தகவலையடுத்து, நேபாளம் வழியாக இந்தியாவிற்கு வரும் அனைத்துப் பகுதிகளிலும் பாதுகாப்புப் படையினர் உஷார் படுத்தப்பட்டுள்ளனர்.

Advertisement